search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் பலி"

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாதேஸ்வரன் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.
    • கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரியபள்ளம் பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 18).

    இவர் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.

    நேற்று இரவு மாதேஸ்வரன் தனது உறவினரின் டிராக்டரை எடுத்துக்கொண்டு ஓட்டி பழகுவதற்காக அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள வயலில் டிராக்டரை ஓட்டி பழகும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    இதில் மாதேஸ்வரன் மேலே டிராக்டர் விழுந்ததால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹரிராஜ் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிராஜ் (வயது 19). இவர் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறினார்.

    அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஹரிராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

    இதை தொடர்ந்து ஹரிராஜின் உடல் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்பு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. ஹரிராஜின் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

    டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    • இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (வயது21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் வீடு எடுத்து தங்கி தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வினய்குமார் உடன் படிக்கும் தனது நண்பர்களான ரேவனு, திவ்ய தேஜாவுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    கல்லூரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய சாலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த வினய் குமார் மீது திடீரென இடி தாக்கியது. இதில் வினய் குமார், மற்றும் உடன் இருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வினய்குமாரை மீட்டு அருகில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினய்குமார் பரிதாபமாக இறந்தார். இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் இடி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

    அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களான சூரம்பட்டியைச் சேர்ந்த சம்பத், அரசு, அழகு, குமார், ரமேஷ், அழகேசன், கண்ணையன், வினோத் குமார், தாமோதரன், சீனிவாசன் மற்றும் ஜடையம்பட்டியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகரசன் மகன் கிரி (வயது22) என்பவர் கடந்த சிலதினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அவர் சிகிச்சைக்கு வந்தபோது உடல் நலிவுற்று இருந்ததை பார்த்து தனியார் மருத்துவமனை டாக்டர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.

    உடனே கிரியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்கு கிரியை பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் கிரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடலை வாங்க மறுத்து அரூரில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரியின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம் என தெரிய வந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததார்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிரியின் தந்தை அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் கிரிக்கு சிகிச்சை அளித்த 2 தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவதற்காக இறங்கி உள்ளனர்.
    • அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் வாய்க்காலில் இருந்த சிலர் ஓடி வந்தனர்.

    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சாஜிவுதீன் பாத்திமா. இவரது மகன் முபாரக் (வயது 18). சாஜிவுதீன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    முபாரக் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் மதியம் சாஜிவுதீன் பாத்திமா தனது மகன் முபாரக் மற்றும் உறவினர்களுடன் காரில் கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வந்தனர்.

    சத்தியமங்கலத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு சத்தியமங்கலம் அடுத்த செண்பகப்புதூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு வந்தனர். அப்போது சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவதற்காக இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் நீரில் மூழ்கினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் வாய்க்காலில் இருந்த சிலர் ஓடி வந்தனர். இதையடுத்து அவர்கள் சாஜிவுதீன் பாத்திமாவை காப்பாற்றி விட்டனர். ஆனால் அவரது மகன் முபாரக் அதற்குள் நீரில் மூழ்கி விட்டார்.

    பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய முபாரக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அவரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் முபாரக்கை தேடினர்.

    அப்போது வாய்க்காலின் சிறிது தூரத்தில் முபாரக் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருக்கும்போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார்.
    • பொதுமக்கள் மாணவர் மோகனசுந்தரத்தை இறந்த நிலையில் மீட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த, கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் மோகனசுந்தரம் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார்.

    பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மோகனசுந்தரம் தனது நண்பர்கள் 2 பேருடன் அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.

    நண்பர்கள் 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார். நண்பர்கள் 2 பேரும் கரையோரமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் மோகனசுந்தரம் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடினர். பின்னர் மாணவர் மோகனசுந்ரத்தை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் மாணவர் மோகனசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம், வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 22-ந்தேதி காலை நேதாஜி வழக்கம் போல் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அவர் ஓடிச்சென்று ஏற முயன்றார். இதில் நிலை தடுமாறிய நேதாஜி ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி விழுந்தார்.

    அவர் மீது ரெயில் பெட்டிகள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேதாஜி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவன் தனது நண்பர்களுடன் தெப்பக்குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
    • தெப்பக்குளத்தில் குளித்தபோது விஜய் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே கட்டிநாயகன்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்.

    இவர் மகன் விஜய் (17). ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று கட்டிநாயகன்பட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் தனது தாய் பழனியம்மாளுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவன் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இதையடுத்து குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளம் அருகே விஜயின் சட்டை, பேண்ட் இருப்பதை பார்த்த ஊர் பொதுமக்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து ஜலண்டாபுரம் போலீசார் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    மாணவன் தனது நண்பர்களுடன் தெப்பக்குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தில் தேடி பார்த்தனர். பின்னர் மாணவன் விஜயை பிணமாக மீட்டனர்.

    தெப்பக்குளத்தில் குளித்தபோது விஜய் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா (வயது19). கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க. அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியே வந்த மாநகர பஸ்சில்(எண்48சி) முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதனால் படிகட்டில் நின்ற சூர்யா எதிர்பாராதவிதமாக கால் தவறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
    • கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, படமடா ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உள்ளார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக லட்சுமணன் இரவு நேரங்களில் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார்.

    லட்சுமணனும் அவரது நண்பரும் நேற்று பைக் டாக்ஸியில் பானு நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். சீனிவாச ராவ் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் சீனிவாச ராவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் வந்த வாலிபர்கள் சிலர் காரில் ஒட்டப்பட்டு இருந்த எம்.எல்.சி. ஸ்டிக்கரை கிழித்து எடுத்துச் சென்றனர்.

    கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    காரை ஓட்டி வந்தவர் அவரது உறவினர் ஜமீல். அவர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் காரில் 2 மது பாட்டில்கள் இருந்தன.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது எம்எல்சி யின் கார் இல்லை. ஜமீலின் சகோதரி ஷேக் நாகினாவின் கார் என தெரிவித்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.

    ×